ஆரணியில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல்
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆரணியில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆரணியில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலை தவறி செயல்படுவதாக கூறி தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்காக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வந்தார்.
போலீசார் அவர்களை அனுமதிக்காததால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில்.தி.மு.க.வினர் ஆமறியலில் ஈடுபட்டனர். ஆரணியில் மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு தலைமையில் ஆரணி பழைய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகாமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார். மறியலில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளரும், மாவட்ட கவுன்சிலருமான அ.கோவிந்தராசன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான வக்கீல் கே.சங்கர், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவரும், ஒன்றிய செயலாளருமான ஜி.வி. கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலரும் ஒன்றிய செயலாளருமான பூங்கொடி திருமால், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் அரசு வக்கீல் வி.வெங்கடேசன், ஆரணி பட்டு கூட்டுறவு சங்க தலைவர் சேவூர் ஜெ.சம்பத், அன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், மேற்கு ஆரணி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் குன்னத்தூர் செந்தில், நகர சபை உறுப்பினர்கள் ரம்யா குமரன், நடராஜன், விநாயகம், சிவக்குமார், நகர செயலாளர் அசோக் குமார் பையூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 97 பேரை ஆரணி நகர போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
========