தே.மு.தி.க.வினர் திடீர் சாலை மறியல்
அரியலூரில் தே.மு.தி.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அண்ணா சிலை அருகே நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக செயலாளர் ஜெயவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜய் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக கட்சி தொண்டர்கள் சிலர் வெடி வெடித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வெடி வெடிக்கக்கூடாது என கூறினர். அதையும் மீறி அவர்கள் வெடி வெடித்ததால் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், கூட்டம் முடிந்த பிறகு 3 பேரையும் கைது செய்ததை கண்டித்து தே.மு.தி.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story