சென்னையில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்: பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கடும் அவதி


சென்னையில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்: பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 29 May 2023 6:18 PM IST (Updated: 29 May 2023 6:20 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் புறநகரில் மாநகரப்பஸ் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பஸ்களை திடீரென நிறுத்தி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். பூந்தமல்லி, ஆவடி, தாம்பரம் பணிமனைகளில் இருந்து மிகக்குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சென்னையில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பஸ் நிறுதங்களில் காத்திருந்தனர் தாம்பரம் பணிமனையில் இருந்து மாநகர பஸ்கள் குறைந்த அளவில் இயக்குப்படுவதாக புகார் எழுந்தது.

சைதாப்பேட்டை, கே.கே.நகர்,வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் சேர்ந்த பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பஸ்களை திடீரென நிறுத்தி பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் தொமுச பேசி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நலன் கருதி பஸ்களை இயக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் கூறியுள்ளோம் என தொமுச நடராஜன் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story