ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்


ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
x

விக்கிரமசிங்கபுரத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 90 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 10-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த மாதம் நேற்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே உடனடியாக காலதாமதமின்றி சம்பளம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.730 வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க தலைவர்கள் முருகன் சுடலையாண்டி, ரவீந்திரன் உள்பட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story