பணியை ராஜினாமா செய்வதாக போலீஸ்காரர் திடீர் வீடியோ
பணியை ராஜினாமா செய்வதாக போலீஸ்காரர் திடீர் வீடியோ
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் கார்த்திக். இவர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு ேமல் ஆகியும் இன்னும் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதால் எனது உன்னதமான காவல் பணியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்திய இந்த வீடியோ வைரலாக பரவியது.
இந்நிலையில் போலீஸ்காரர் கார்த்திக்கின் வீடியோ குறித்து விசாரணை நடத்த துணை போலீஸ் சூப்பிரண்டுவுக்கு உத்தரவிட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்தார்.
Related Tags :
Next Story