துபாயில் இதய நோயால் தவித்தவர்கோவைக்கு அழைத்து வரப்பட்டார்


துபாயில் இதய நோயால் தவித்தவர்கோவைக்கு அழைத்து வரப்பட்டார்
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இதய நோயால் அவதிப்பட்டு வந்தவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கையால் கோவை அழைத்து வரப்பட்டார். அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர்

கோவை

துபாயில் இதய நோயால் அவதிப்பட்டு வந்தவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கையால் கோவை அழைத்து வரப்பட்டார். அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

துபாயில் அவதி

கோவை மதுக்கரையை சேர்ந்தவர் பைரோஸ்கான் நவாப்ஜான் (வயது 43), ஏ.சி. மெக்கானிக். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்று வேலை பார்த்தார். இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இதய கோளாறு மற்றும் மூளையில் ரத்தக் கசிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக துபாயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பெற பொருளாதார ரீதியாக வசதி இல்லாததால், இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து சொந்த ஊரில் சிகிச்சை பெற அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் ஏற்பாடு

இதுகுறித்து துபாயில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஒருவர், கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் சுபி கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுபி கிருஷ்ணன் இந்த தகவலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும் துபாயில் தவித்து வரும் பைரோஸ்கான் நவாப்ஜானை கோவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை சார்பில் துபாயில் தவித்து வந்த பைரோஸ்கான் நவாப்ஜானை கோவை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை அழைத்து வந்தனர்

இதையடுத்து பைரோஸ்கான் நவாப்ஜானை விமான மூலம் கொச்சி அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக ஆர்வலர் சிபி கிருஷ்ணன், ஆஸ்பத்திரி டீன் நிர்மலாவை சந்தித்து தமிழக அரசுக்கும், அரசு ஆஸ்பத்திரிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினரையும் கேட்டுக்கொண்டார்.

இதய நோயால் துபாயில் தவித்து வந்தவரை கோவை கொண்டு வர நடவடிக்கை எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் பாராட்டினர்.

1 More update

Next Story