டிராக்டர்களில் இருந்து குப்பை சாலையில் சிதறுவதால் அவதி


டிராக்டர்களில் இருந்து குப்பை சாலையில் சிதறுவதால் அவதி
x

டிராக்டர்களில் இருந்து குப்பை சாலையில் சிதறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதுவரை அருப்புக்கோட்டை நகராட்சியில் குப்பை அள்ளும் பணிகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது நகராட்சி முழுவதும் குப்பை அள்ளும் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவுட்சோர்சிங் முறையில் நகராட்சியில் குப்பை அள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் குப்பைகளை சேகரிக்கும் தனியார் நிறுவனத்தினர் டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் குப்பைகளை எடுத்து குப்பை கிடங்கிற்கு செல்கின்றனர். அவ்வாறு வாகனங்களில் எடுத்துச் செல்லும் குப்பைகளை மூடாமல் செல்வதால் குப்பைகள் அனைத்தும் வீதிகளில் சிதறுகின்றன. இறைச்சிக்கழிவுகள், துர்நாற்றம் வீசும் குப்பைகள் குப்பை வாகனங்களில் இருந்து கீழே விழுகின்றன. மோட்டார் சைக்கிளில் செல்வோர் முகத்திலும் சில சமயங்களில் விழுந்து விடுகிறது. எனவே குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை முறையாக மூடிச்செல்லவும், அனைத்து இடங்களிலும் குப்பைகளை அகற்றி அருப்புக்கோட்டை நகராட்சியை ஒரு சுகாதாரமான நகராட்சியாக மாற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story