மூங்கில்துறைப்பட்டு அருகேதீ விபத்தில் கரும்புகள் எரிந்து சேதம்


மூங்கில்துறைப்பட்டு அருகேதீ விபத்தில் கரும்புகள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T00:16:44+05:30)

மூங்கில்துறைப்பட்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகள் எரிந்து சேதமானது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கர்ணராஜன் மகன் சுந்தர்ராஜன் (வயது 37), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து பராமரித்து வந்தார்.

நேற்று மதியம் இவருடைய கரும்பு வயல் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற விவசாய தொழிலாளர்கள் இதுபற்றி சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது. இந்த தீவிபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story