டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரிகரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரிகரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 6:46 PM GMT)

டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி


மூங்கில்துறைப்பட்டு,

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மூங்கில்துறைப் பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க தலைவர் கதிர்கோபால் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எத்திராஜ், வடக்கு கோட்ட தலைவர் நாராயணசாமி, தெற்கு கோட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க துணை தலைவர் சீனிவாசன் வரவேற்றார்.

தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் வேல்மாறன், மாநில செயலாளர்கள் ஜோதிராமன், பலராமன், பொருளாளர் புவனேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், ஆலை வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட இணை மின் நிலைய பணிகளை தொடங்கி, விரைந்து முடித்திட வேண்டும். ஆலை இயங்கும்போது வெளியேறும் கரிதுகள்கள் பரவுவதை தடுப்பது, வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும், விவசாயிகள் பயிர் செய்த கரும்புகளை 12 மாதத்திற்குள்ளாக அறுவடை செய்வதற்கு ஆலைநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் முதல் தேதியில் அரவை பணியை தொடங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சகாதேவன் நன்றி கூறினார்.


Next Story