பள்ளிபாளையத்தில்கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையம்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் ஓடப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலை மட்ட கிளை தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் நல்லா கவுண்டர் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 5 கோடி கரும்பு விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்துள்ளது. 9.5 பிழித்திறன் கொண்ட கரும்புகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை வழங்க வேண்டும், பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகம் வெட்டுக் கூலியை கட்டுப்படுத்த வேண்டும், கரும்புக்கு தீ வைத்து வெட்டுவதை நிறுத்த வேண்டும், கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு விலை பட்டியலை அவர்கள் வீடுகளில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பொருளாளர் பழனிச்சாமி, துணை தலைவர்கள் லோகநாதன், சுப்பையன், தங்கராசு, துணை செயலாளர் குமாரசாமி, பூபதி, நடேசன் மற்றும் ஆலை மட்ட கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.