எந்திரம் மூலம் கரும்பு அறுவடை


எந்திரம் மூலம் கரும்பு அறுவடை
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் எந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்ய விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் எந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்ய விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கரும்பு சாகுபடி

சீர்காழி தாலுகாவில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அகலப்பார் முறையில் கரும்பு சாகுபடி செய்திருக்கும் விவசாயிகளுக்கு மேலாண்மை இயக்குனர் சதீஷ் உத்திரவின்படியும், தலைமை கரும்பு அலுவலர் ஆலோசனைப்படியும் கரும்பு வெட்டும் எந்திரம் வரவழைக்கப்பட்டு கரும்பு அறுவடை செய்யப்படுகிறது.

எந்திரம் மூலம் அறுவடை செய்வதன் மூலம் கரும்பினை அடியோடு வெட்டுவதால் கூடுதல் மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கும், ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏக்கர் வரை அறுவடை செய்யலாம். சோலை எரிப்பது தவிர்க்கப்படுகிறது. மேலும் எந்திரம் மூலம் அறுவடை செய்வதால் வெட்டுக்கூலி மிச்சமாகும்.

எந்திரம் மூலம் அறுவடை

ஆட்கள் மூலம் கரும்பு அறுவடை செய்யும் போது ஏக்கர் ஒன்றிற்கு 7 நாட்கள் ஆகும். இதன் மூலம் வெட்டுக்கூலியும் அதிகமாகும். எனவே அனைத்து விவசாயிகளும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி அகலப்பார் முறையில் குறிப்பாக நிலத்தினை நேர் வாக்கில் பார் அமைத்து வயல் நடுவில் வரப்பு, வாய்க்கால் இல்லாமல் அமைத்து நடவு செய்ய கரும்பு விவசாயிகளுக்கு ஆலையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலையின் சார்பில் சீர்காழி அருகே கூத்தியம் பேட்டை கிராமத்தில் ஒரு வயலில் கரும்பு எந்திரம் கொண்டு கரும்பு அறுவடை செய்வதற்கான பணிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கரும்பு அலுவலர்கள் செல்வராஜ், சுந்தர் சிங் மற்றும் முத்து ஆகியோர் செய்துள்ளனர்.


Next Story