கரும்பு விற்பனை தொடங்கியது
பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புகள் விற்பனை தொடங்கியது. ஒரு கட்டு கரும்பு ரூ.350 முதல் விற்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புகள் விற்பனை தொடங்கியது. ஒரு கட்டு கரும்பு ரூ.350 முதல் விற்கப்படுகிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கரும்பு, வாழை, வெற்றிலை, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் கரும்பும் சாகுபடி செய்யப்படுகின்றன.வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, சூரக்கோட்டை, துறையூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், கம்பர்நத்தம், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை போன்ற பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்புகள் நடவு செய்யப்படும்.
அறுவடை தொடங்கியது
இந்த கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். விதை கரும்புகள் இப்போது நடவு செய்தால் தான் ஜனவரி மாதம் அறுவடைக்கு தயாராகி விடும். இதன்காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தற்போது பொங்கல் கரும்புகள் நன்கு வளர்ந்துள்ளன. இந்த கரும்புகளை வெட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் அதனை அறுவடை செய்து சந்தை படுத்தும் பணி தொடங்கி உள்ளது.
விற்பனைக்கு வந்த கரும்புகள்
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே இப்போதே பொங்கல் கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. பத்து கரும்புகள் கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.350 முதல் விற்கப்படுகிறது.மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு முழு கரும்பு வழங்கப்பட இருப்பதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.