குறைந்த விலைக்கு விற்பனையான கரும்புகள்


குறைந்த விலைக்கு விற்பனையான கரும்புகள்
x
தினத்தந்தி 14 Jan 2023 6:44 PM GMT (Updated: 2023-01-15T01:20:17+05:30)

குறைந்த விலைக்கு கரும்புகள் விற்பனையானது.

பெரம்பலூர்

கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு இடம் பெற்று வருகிறது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுவதால், இந்த ஆண்டு தமிழகத்தில் கரும்பு சாகுபடி அதிகரித்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு கரும்பு கட்டுகளின் விலை தொடக்கத்தில் இருந்தே குறைவாக காணப்பட்டது. பெரம்பலூரில் 10 கரும்புகளை கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.200-ல் இருந்து விற்கப்படுகிறது. வியாபாரிகள் கரும்பு கட்டுகளை கூவி, கூவி விற்பனை செய்து வருகின்றனர். அதிகபட்சம் ஒரு கரும்பு கட்டு ரூ.350 வரை விற்கப்பட்டது.

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை ஆங்காங்கே கரும்பு கட்டுகளை வியாபாரிகள் அடுக்கி வைத்து விற்பனை செய்தனர். மேலும் துறையூர் ரோடு, ஆத்தூர் ரோடு, மூன்று ரோடு, நான்கு ரோடு பகுதிகளில் கரும்பு கட்டுகளின் விற்பனை களை கட்டியது.

விலை குறைவால் பொதுமக்கள் கரும்புகளை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். ஆனால் பூக்களின் விலை உச்சத்தை தொட்டது. மஞ்சள் குலையும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.


Next Story