சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்
சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்
சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 10.50 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து தினமும் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
நேற்று காலை 4-ம் கால யாகபூஜையும், மாலையில் 5-ம் கால பூஜையும் நடந்தது. இன்று (புதன்கிழமை) 6-ம் கால பூஜை நடக்கிறது. தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 10.50 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு கும்பாபிஷேக தீபாராதனை நடக்கிறது.
120 சிவாச்சாரியார்கள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் 54 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 120 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். மொத்தம் 21 கலசங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 17 கவசங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டு உள்ளன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மதியம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் உள்ள கொடி மரத்தில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. தொடர்ந்து கலசங்கள் பொருத்தப்பட்டன. மேலும் வண்ண அலங்காரத்தில் தயாரிக்கப்பட்ட 5 யாக குண்டங்கள் கோவிலில் அமைக்கப்பட்டு உள்ளன.
பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன
அதைசுற்றி பல்வேறு சாமி சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோன்று 63 நாயன்மார்கள் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. யாக சாலையில் 700 கலசங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதற்காக சாமி தரிசனம் செய்ய வசதியாக பக்தர்கள் செல்லவும், முக்கிய பிரமுர்கள் செல்லவும் என 2 பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அமைச்சர் சேகர்பாபு
மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கும்பாபிஷேகத்திற்கான பூஜை பொருட்கள் கோவிலுக்கு நேற்று எடுத்து வரப்பட்டன. கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.