வீட்டை சுத்தம் செய்யும் திராவகம் குடித்து 80 வயது மூதாட்டி தற்கொலை ஆட்டையாம்பட்டி அருகே சோகம்


வீட்டை சுத்தம் செய்யும் திராவகம் குடித்து 80 வயது மூதாட்டி தற்கொலை ஆட்டையாம்பட்டி அருகே சோகம்
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 15 July 2023 4:42 PM IST)
t-max-icont-min-icon

வீட்டை சுத்தம் செய்யும் திராவகம் குடித்து 80 வயது மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்

சேலம்

பனமரத்துப்பட்டி:

ஆட்டையாம்பட்டி அருகே வீட்டை சுத்தம் செய்யும் திராவகம் குடித்து 80 வயது மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

80 வயது மூதாட்டி

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள ராக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் மனைவி நல்லம்மாள் (வயது 80). இந்த தம்பதிக்கு தமிழ்மணி என்ற மகனும், பாக்கியம், ராஜம்மாள் என்ற இரு மகள்களும் உள்ளனர். ராமசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்த விட்டதால் நல்லம்மாள், மகன் தமிழ்மணி பராமரிப்பில் அவரது வீடு அருகிலேயே தனியாக வசித்து வந்தார். தனது வீடு மற்றும் விவசாய நிலங்களை பாகம் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களுக்கு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் நல்லம்மாள், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சாவு

நேற்று முன்தினம் வீட்டை சுத்தம் செய்யும் திராவகத்தை நல்லம்மாள் குடித்துள்ளார். அவருக்கு நெஞ்சு எரிச்சல் இருந்ததால் வலியால் அலறி துடித்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு சீரகாபாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story