மனைவி இறந்த துக்கத்தில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி இறந்த துக்கத்தில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2023 1:00 AM IST (Updated: 8 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்கான் (வயது 23). தர்மபுரியில் உள்ள ஒரு வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சபின்தாஜ். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சபின்தாஜ் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த ஜாபர்கான் மிகவும் சோகமாக இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் ஜாபர்கான் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மனைவி இறந்ததால் ஏற்பட்ட மன வேதனையால் ஜாபர்கான் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story