அரூர் கச்சேரிமேட்டில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைஉறவினர்கள் சாலைமறியல்


அரூர் கச்சேரிமேட்டில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைஉறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 9 Aug 2023 1:00 AM IST (Updated: 9 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் கச்சேரிமேட்டில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூலித்தொழிலாளி

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த முத்தனூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது45). கூலித்தொழிலளி. இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் அரூர் போலீசார் விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சங்கரின் மனைவி அரூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் எனது கணவர் மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனத்தில் வைத்து பணம் வாங்கினார். தவணை தொகை செலுத்த காலதாமதம் ஆனதால் ஊழியர்கள் அவரை கண்டித்தனர். இதனால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான நிதிநிறுவன ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை சங்கரின் உறவினர்கள் அரூர் போலீஸ் நிலையம், கச்சேரிமேடு ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் (பொறுப்பு) மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story