கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி

சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவரன்குட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 46). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று மது போதையில் மரவள்ளி கிழங்கு சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது குடிக்கும் பழக்கம்

ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரியை சேர்ந்தவர் தீபக் நாராயணன் (19). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 7-ந் தேதி அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூதாட்டி

ஓசூர் நாகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராமச்சந்திரா. இவரது மனைவி கவுரம்மா (63). வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவர் இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமடையாததால் மன வேதனையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கவுரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர்

கெலமங்கலம் அருகே உள்ள காடுலக்கசந்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (23). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் நலம் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story