குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரியில்விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி
குருபரப்பள்ளி அருகே உள்ள நெருமருதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன் (வயது 53). விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் கொட்டகொல்லை பகுதியை சேர்ந்தவர் கோபி 23). டிரைவர். உடல் நலக்குறைவால் பதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story