மகேந்திரமங்கலம் அருகேமூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
பாலக்கோடு:
மகேந்திரமங்கலம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டி
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே பிக்கல்நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர்ஆனந்தம்மாள் (வயது75). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மூதாட்டி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினம் வயிற்று வலி குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மூதாட்டி நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவிலலை. நேற்று காலை கிராமக்கள் அங்குள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு மரத்தில் மூதாட்டி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மூதாட்டி தற்கொலை செய்து ெகாண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.