மகேந்திரமங்கலம் அருகே9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பாலக்கோடு:
மகேந்திரமங்கலம் அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவி
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சத்யா (வயது16). சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கடந்த 2 மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் கடமனூரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே நேற்று மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.