பென்னாகரம் அருகேபுதுப்பெண் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை


பென்னாகரம் அருகேபுதுப்பெண் விஷம் குடித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 5 Sept 2023 1:00 AM IST (Updated: 5 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

புதுப்பெண்

பென்னாகரம் அருகே போடூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மகள் காவ்யா (வயது 19). இவருக்கும், எலுமிச்சனஅள்ளியை சேர்ந்த வேலு மகன் வினல்குமார் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் எலுமிச்சனஅள்ளியில் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே வினல்குமாரின் தரப்பில் வரதட்சணை கேட்டதாகவும், இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு காவ்யா தன்னுடய பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.

தற்கொலை

பெற்றோர் வீட்டில் இருந்த காவ்யா, யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் காவ்யா பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவ்யாவுக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆவதால் உதவி கலெக்டர் விமலாராணி விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story