தர்மபுரி அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை
தர்மபுரி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி
தர்மபுரி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி
தர்மபுரி அருகே உள்ள இருளப்பட்டியை சேர்ந்தவர் குப்பன் (வயது 50). விவசாயி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். குப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அந்த பழக்கத்தை விட்டு விடும்படி குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவரால் மது பழக்கத்தை நிறுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவத்தன்று குப்பன் வீட்டின் வெளியில் உள்ள ஒரு கட்டிலில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் குப்பனை மீட்டு புலிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குப்பன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குப்பன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.