தேன்கனிக்கோட்டையில்மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை


தேன்கனிக்கோட்டையில்மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
x

தேன்கனிக்கோட்டையில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா பன்னார்கட்டா பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா. இவரது மனைவி ஜெகதாம்மா (வயது65). இவருக்கும், மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் ஜெகதாம்மா தளி அருகே உள்ள திப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் பணம் கடன் வாங்கினார். அந்த பணத்தை அவர்கள் திருப்பி கேட்டுள்ளனர். இதில் விரக்தி அடைந்த ஜெகதாம்மா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story