தனியார் நிறுவன ஊழியர்கள் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர்கள் தற்கொலை
x

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் சுரேஷ் குமாரின் தாயும் ஓமலூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மன வருத்தத்தில் காணப்பட்ட சுரேஷ்குமார், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் ஜூஜூவாடி காந்தி சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (20). தனியார் நிறுவன ஊழியர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story