திருச்செங்கோடு அருகே வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
திருச்செங்கோடு அருகே வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோர்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் விருதுநகர் மாவட்டம் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்த அருண் (வயது 27) என்பவர் உதவி அலுவலராக வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. இவர் மோர்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் அருண் சமீபகாலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவருக்கு வயிறு வலி அதிகமாகவே, வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷத்தை குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருண் நேற்று இறந்தார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.