மல்லசமுத்திரம் அருகே மாட்டு வியாபாரி தற்கொலை


மல்லசமுத்திரம் அருகே  மாட்டு வியாபாரி தற்கொலை
x

மல்லசமுத்திரம் அருகே மாட்டு வியாபாரி தற்கொலை

நாமக்கல்

எலச்சிபாளையம்:

மல்லசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்குழி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). மாட்டு வியாபாரி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், அவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை அதே ஊரை சேர்ந்த நபருக்கு ரூ.15 லட்சம் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை அந்த நபர் வட்டி, அசல் எதுவும் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வகுமார் நேற்று முன்தினம் இரவு விஷத்தை குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story