புதுச்சத்திரம் அருகே பால் வியாபாரி தற்கொலை


புதுச்சத்திரம் அருகே  பால் வியாபாரி தற்கொலை
x

புதுச்சத்திரம் அருகே பால் வியாபாரி தற்கொலை

நாமக்கல்

நாமக்கல்:

புதுச்சத்திரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story