திருச்செங்கோடு அருகே தறித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


திருச்செங்கோடு அருகே  தறித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருச்செங்கோடு அருகே தறித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி மேட்டுப்பாறை பகுதியை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது 64). தறித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக தறிப்பட்டறையில் வேலை இல்லாதால் வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெரியசாமி தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெரியசாமிக்கு, செல்வி என்ற மனைவியும் திருமணம் முடிந்த 3 மகள்களும் உள்ளனர்.


Next Story