எருமப்பட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் தற்கொலை


எருமப்பட்டி அருகே  பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் தற்கொலை
x

எருமப்பட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் தற்கொலை

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள வடவத்தூர் ஊராட்சி ஜம்புமடை புதுதெருவை சேர்ந்த வீராசாமி மகன் செல்வராஜ் (வயது 45). இவருடைய மனைவி சித்ரா (40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். செல்வராஜ் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பம்பு ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 2 மாதங்களாக செல்வராஜ் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இதற்கிடையே சம்பவத்தன்று அவருக்கு காலில் காயம் அடைந்த பகுதியில் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து விட்டார். அவரை மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story