கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை


கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
x

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40), தச்சு தொழிலாளி. இவருடைய மகள் பவித்ரா (20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த சில தினங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றுமுன்தினம் அவரை கல்லூரி விடுதியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பவித்ரா, மரவேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தன் மீது ஊற்றி தீ வைத்துகொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இது குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story