நாமக்கல் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி சாய் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். நாமக்கல்லில் உள்ள பிரபல மெடிக்கல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் நவநீத கண்ணன் (வயது 25). இவர் கடந்த 2015-ம் ஆண்டு திருச்சியில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்தார். 2-ம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்ததாலும், கொரோனா நோய் தொற்றாலும் அவர் தொடர்ந்து கல்லூரிக்கு செல்லாமல், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் நவநீத கண்ணன் யாரிடமும் பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் மன வேதனையோடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு காபி கொடுப்பதற்காக தாயார் நவநீத கண்ணனின் படுக்கை அறைக்கு சென்றார். அப்போது நவநீத கண்ணன் அங்கு தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நவநீத கண்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.