கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x

காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்ம சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதாப். இவரது மனைவி பாக்யஸ்ரீ (வயது 35). இவரது கணவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிட்னி செயல் இழந்து பாதிப்புக்கு உள்ளானார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த பாக்யஸ்ரீ கடந்த 22-ந் தேதி காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரம் பக்கமுள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பாக்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர் வீட்டுக்கு வந்தபோது கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story