தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

வலங்கைமான் அருகே நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகன் அன்பழகன் (வயது35). தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக இவருடைய மனைவி கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அன்பழகன் மன வேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வலங்கைமான் போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அன்பழகன் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அன்பழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story