அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x

அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தார்கள்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தார்கள்.

காதல் திருமணம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தேவயானி (25).

இருவரும் காதலித்து கடந்த 4 வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு 3 வயதில் பிரணிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 18-ந் தேதி இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் தூங்க சென்றுவிட்டார்கள்.

அதன்பின்னர் மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் பாலசுப்பிரமணியம் எழுந்து வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அன்று நீண்ட நேரமாக தேவயானி வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார்கள். அப்போது வீட்டின் விட்டத்தில் தேவயானி தூக்குப்போட்டு பிணமாக தொங்குவது தெரிந்தது.

கணவர் கைது

உடனே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி தேவயானியின் தாய் ரமணிக்கு தகவல் கொடுத்தார்கள். அவர் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவயானியை தற்கொலைக்கு தூண்டியதாக பாலசுப்பிரமணியத்தை கைது செய்தார்கள்.

பின்னர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தார்கள்.

பாலசுப்பிரமணியத்துக்கும், தேவயானிக்கும் திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.Next Story