மது குடித்ததை மனைவி கண்டித்ததால் ரிக் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மது குடித்ததை மனைவி கண்டித்ததால்  ரிக் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

வேலவுண்டம்பட்டி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் ரிக் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

வேலவுண்டம்பட்டி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் ரிக் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரிக் தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சசிகுமார் (வயது 29) ரிக் தொழிலாளி. இவருடைய மனைவி பானுமதி (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளாள்.

சசிகுமார் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 10-ந் தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலயைில் சசிகுமார் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

இந்த நிலையில் பானுமதி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கம் சாத்தப்பட்டு இருந்ததை பார்த்தார். பின்னர் கதவை தட்டி கணவரை அழைத்தார். ஆனால் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் கணவர் சேலையால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சசிக்குமாரின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story