ஊத்தங்கரை அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை
ஊத்தங்கரை அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள மண்ணாண்டியூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டார். அவர் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முனியப்பன் கடந்த 13-ந் தேதி விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire