எருமப்பட்டி அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை


எருமப்பட்டி அருகே  டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சி செல்லுபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 56). இவர் பள்ளிக்கூட பஸ்சில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி இரவு மனோகரன் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றாராம். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த மனோகரன் விஷம் குடித்து விட்டார். இதனை அறிந்த அவருடைய மகன் சரண் மற்றும் நண்பர்கள் மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மனோகரன் இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story