மகன் இறந்த விரக்தியில் எலி பேஸ்ட் தின்று இளம்பெண் தற்கொலை


மகன் இறந்த விரக்தியில்  எலி பேஸ்ட் தின்று இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகன் இறந்த விரக்தியில் எலி பேஸ்ட் தின்று இளம்பெண் தற்கொலை

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே மகன் இறந்த விரக்தியில் எலி பேஸ்ட் தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மேட்டுப்பட்டி ஊராட்சி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சலீம். கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த திவ்யா (வயது 23) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதில் 2-வது மகன் முகமது ரிங் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்தான். அப்போதில் இருந்து திவ்யா மகன் இறந்த சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி மன உளைச்சலில் இருந்த திவ்யா அங்குள்ள பூனைமலை பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு தான் வைத்திருந்த எலிபேஸ்ட்டை தின்று வீட்டுக்கு மயங்கியவாறு சென்றார்.

விசாரணை

இதையடுத்து வீட்டில் உள்ளவர்களிடம் தான் எலி பேஸ்ட்டை தின்று விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று திவ்யா இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story