குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பரமத்திவேலூர் அருகே குடும்ப தகராயில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

குடும்ப தகராறு

பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர், காட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயதி 32) கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி (25). இவர்களுக்கு விஷ்னு (4) என்ற ஒரு‌மகனும், கனிஷ்கா (2½) என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் தியாகராஜன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் மீனாட்சி இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மீனாட்சி கடந்த 21-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் உள்ள விட்டதில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விசாரணை

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீனாட்சியை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தியாகராஜனுக்கும்‌ மீனாட்சிக்கும்‌ திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆனதால் மீனாட்சியின் தற்கொலை குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story