பொம்மிடி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பொம்மிடி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடி அருகே உள்ள மணலூரை சேர்ந்தவர் முருகன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சின்ன பாப்பா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் முருகன், அவருடைய அண்ணன் பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் நேற்று காலை அவரது விவசாய நிலத்தில் உள்ள கொட்டாயில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி சின்ன பாப்பா கொடுத்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story