பெயிண்டர் தற்கொலை
குமாரபாளையத்தில் கடன் பிரச்சினையால் பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல்
பள்ளிபாளையம்
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 56). பெயிண்டர். இவரது மனைவி கலைச்செல்வி. இந்தநிலையில் கோபாலகிருஷ்ணன் பலரிடம் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த முடியவில்லை என மனைவி கலைச்செல்வியிடம் பல முறை கூறியுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் கடன் பிரச்சினையால் மன வேதனையில் இருந்த கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் காலை விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
Related Tags :
Next Story