புஞ்சைபுளியம்பட்டியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


புஞ்சைபுளியம்பட்டியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x

புஞ்சைபுளியம்பட்டியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எலக்ட்ரீசியன்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் குமார் (வயது 35). இவர் திருநெல்வேலி அருகே வள்ளியூரில் உள்ள காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி வானதி (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் குமார் வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்து தங்கியிருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் விக்னேஷ்குமார் நேற்று முன்தினம் காலை தனது மகனை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் விக்னேஷ்குமார் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் விக்னேஷ்குமாரின் தாயார் வீட்டுக்கு வானதி சென்று பார்த்தார்.

அங்கு வீடு திறந்து கிடந்தது. இதனால் உள்ளே சென்று பார்த்தபோது விக்னேஷ்குமார் வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு விக்னேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story