விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
பள்ளிபாளையத்தில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அடுத்த கலியனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). இவர் முடி திருத்தும் கூலித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கீதா (32). இவர் தையல் வேலைக்கு சென்று வருகிறார். இந்தநிலையில் தங்கவேலு சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தங்கவேலு மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மதியம் தங்கவேலு விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தங்கவேலு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கீதா பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.