பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி அருகே உள்ள கோனூர், மேற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாந்தி (வயது 55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் பழனிசாமி இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த சாந்தி வருமானம் இல்லாமல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சாந்தி வீட்டை விட்டு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சாந்தி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சாந்தி உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story