தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

கபிஸ்தலம் அருகே வேலையை விட்டு நீக்கியதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே வேலையை விட்டு நீக்கியதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலையை விட்டு நீக்கம்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள பட்டுக்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த சண்முகம் மகன் அரவிந்த்ராஜ்(வயது 29). இவர், பாலிடெக்னிக் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை வேலையை விட்டு நீக்கி விட்டதாக தனது உறவினர் ஒருவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து உறவினர் அவரை ஊருக்கு வருமாறு கூறி உள்ளார். அதன்படி ஊருக்கு வந்த அரவிந்த்ராஜ், வேலையை விட்டு நீக்கப்பட்டதால் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று கணபதிஅக்ரஹாரம்-பட்டுக்குடி செல்லும் சாலையில் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜகுமாரிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பு நம்பியார், அன்பழகன் மற்றும் போலீசார் அங்கு சென்று அரவிந்த்ராஜின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலையை விட்டு நீக்கப்பட்டதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story