கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
வேலகவுண்டம்பட்டி அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பரமத்திவேலூர்suicide
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகரை சேர்ந்தவர் காளியண்ணன் (வயது 49) விவசாயி. இவரது மகன் மனோஜ் (21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மனோஜ் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மனோஜின் பெற்றோர் தோட்டத்திற்கு சென்றனர். இந்தநிலையில் மனவேதனையில் வீட்டில் இருந்த மனோஜ் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு வந்த அவரது பெற்றோர் அதைபார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.