கல்லூரி மாணவி தற்கொலை


கல்லூரி மாணவி தற்கொலை
x

திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு கைலாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவரது மகள் கோபிகா (வயது 18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்துள்ளார். நேற்று காலை சந்தியா வேலைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கோபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிகாவின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story