வள்ளிபுரம் அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
மோகனூர்:
வள்ளிபுரம் அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொத்தனார்
நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் அருகே உள்ள எம்.ராசாம்பாளையம் ஊராட்சி மாடகாசம்பட்டியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 51). கொத்தனார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறுப்படுகிறது.
இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலுசாமி விஷம் குடித்து வாங்கி எடுத்தார்.
விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாலுசாமி இறந்தார். இதுகுறித்து அவருடைய மகன் பூவரசன் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பூர்ணிமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.