மங்களபுரம் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அருகே உள்ள உரம்பு பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 46). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அன்னக்கொடி (41). இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் தங்கதுரை வீட்டில் இருந்தபோது விஷம் குடித்ததாக தெரிகிறது. இதையொட்டி உயிருக்கு போராடிய அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தங்கதுரை இறந்தார். இதுகுறித்து மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire